பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 503

           ஒப்பாரி 

    கண்டதெல்லாம் எங்க சனம் 
    பூலோக வாசலிலே 
    போனதெல்லாம் எங்க சனம் 
    பண்ணை பெருத்தா, 
    பலசோலிக்காரி-என்னைப் பெத்த 
                        அம்மா 
    தேரை நிறுத்துங்க என்னப் பெத்த 
                        அம்மா 
    திருமுகத்தை நான் பார்க்க! 
    சந்தை கிடந்ததா 
    என்னைப் பெற்ற அம்மா 
    சத்திரங்கள் தாத்தாத்தா 
    உனக்குக் கொட்டேது முழக்கமேது? 
    கோல வர்ணத் தேரேது? 
    கல் நெஞ்சுக்காரி வராள், 
    நடத்தி விடு பூந்தேரை-நான் 
    ஏழு கோண மண்டபம் கழித்து- 
                         நான் 
    முத்துமே தந்து 
    முக்கடலும் போனாலும் 
    முத்துக் கெட்டவ வாராள்னு- 
                        என்னை 
    சமுத்திரமே தள்ளி விடும் 
    சீதை பிறந்தவிடம், 
    சிறுமதுரை அடிவாரம் 
    சீதை விடும் கண்ணிரு 
    சின்னமடி நிறைந்து 
    திருப்பாற்கடல் நிறைந்து 
    கன்னி பிறந்தவிடம்; 
    காசியின் அடிவாரம் 
    கன்னி விடும் கண்ணிர் 
    கப்பல் கடல் நிறைஞ்சு 
    கடற்கரையே போய்ப் பாய்ஞ்சு 
    தெற்கே மனை வாங்கி 
    தென்மதுரைத் தேர் எழுதி 
    சீரிடும் தாயாரை நான் 
    தெற்கே அனுப்பி வைத்தே 
    வடக்கே மலை வாங்கி 
    வடமதுரைத் தேர் எழுதி 
    வரிசையிடும் தாயாரை நான் 
    வடக்கே அனுப்பி வைத்தேன். 
    நல்ல துளசியே நான்