பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

504

     தமிழர் நாட்டுப் பாடல்கள்


    நடுக்கரையே நாட்டி வைத்தேன் 
    நாலு காலப் பூசைக்கு நீ ஒரு 
    நல்ல மலர் ஆகலியே! 
    கோபுரம் ஆண்டகுடி நம்ம 
    குணத்தினால் கெட்ட குடி 
    மங்களமாய் ஆண்ட குடி நம்ம 
    மதியிலே கெட்ட குடி, 
    கொத்துச் சரப்பளியாம் 
    கோதுமை ராக்குடியாம் 
    கொல்லன் அறியாம உனக்கு 
    கொக்கி கழண்டதென்ன? 
    நங்கச் சரப்பளியாம் 
    தாழம்பூ ராக்குடியாம் 
    தட்டான் அறியாம உனக்கு 
    தடுக்கு கழண்டதென்ன? 
    மூங்கப்புதரிலே நான் 
    முகங்கழுவப் போகையிலே 
    மூங்கிலு துரங்கலையே நான் 
    முகங்கழுவி மேடேற 
    தாழப்புதரிலே நான் 
    தலைமுழுகப் போகையிலே
    தாழை துரங்கலியே நான் 
    தலைமுழுகி மேடேற 
    பழனி மலையோரம் 
    பனிப்புல்லாப் பொய்கையிலே-
                        நான் 
    பாவி குளிப்பேனிண்ணு எனக்கும் 
    பாஷாணத்தை ஊற்றினார்கள் 
    இலஞ்சிமலைமேலே 
    இனிப்புல்லாப் பொய்கையிலே 
    ஏழை குளிப்பேன் என்று எனக்கு 
    இடிமருந்தைத் தூற்றினார்கள் 
    அரைச்ச மஞ்சள் கொண்டு நான் 
    ஆற்றுக்கே போனாலும் 
    அரும்பாவி வாராளென்று எனக்கு 
    ஆறும் கலங்கிடுமே குளிக்க 
    மஞ்சள் கொண்டு நான் 
   குளத்துக்கே போனாலும் 
   கொடும்பாவி வாராளென்று