பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 505

             ஒப்பாரி 


    குளமும் கலங்கிடுமே 
    பூமியைக்கீறி எனக்குப் 
    புதுப்பானைப் பொங்கலிட்டு
    பூமி இளகலியே எனக்குப் 
    புதுப்பானை பொங்கலியே 
    நிலத்தைக்கீறி எனக்கு 
    நிறைப்பானைப் பொங்கலிட்டு 
    நிலமும் இளகலியே எனக்கு 
    நிறைபானை பொங்கலியே 
    சன்னல் எட்டிப் பார்த்தானோ- 
                      உனக்கு 
    சரவிளக்கைக் கொள்ளையிட? 
    மண் எட்டிப் பாத்தானோ-உனக்கு 
    மணி விளக்கை கொள்ளையிட 
    ஓடிவந்து காலாற எனக்கு 
    ஊடே சத்திரமோ? 
    நடந்து வந்து காலாற-எனக்கு 
    நடுவே சமுத்திரமோ?


    வட்டார வழக்கு: மாளியல்- மாளிகை பேச்சு); கொட்டாரம்-அரண்மனை (மலையாளம்); மேவிடு-மாடி;


    குறிப்பு: இவள் சாதியில் தாழ்ந்தவளாயினும் இவளுடைய ஆடைகளையும், அழகையும் பார்த்து இவளை உயர்ந்த சாதிகளான பார்ப்பார், வெள்ளாளர் வீட்டுப் பெண்ணோ என்று ஊரார் வியந்து கூறுவார்கள்.
    இறந்தவருக்குக் கவலை இல்லை, இருப்பவர்கள் கவலைக்குள்ளானார்கள்.
    பளிச்சி-பளிங்கன் மனைவி. காட்டுச் சாதியினர் பாபநாசம் முதல் சிவகிரி வரையிலுள்ள மலைச்சரிவில் சிறு சிறு கூட்டங்களாக இவர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் பேசுவது கொச்சைத் தமிழ், வேட்டையாடித் தின்னும் ஒரு பிரிவினரும், புன்செய்ப் பயிர், காட்டு விவசாயம் முதலியன செய்து வாழும் மற்றோர் பிரிவினரும் இருக்கின்றனர்.


    சக்கிலிச்சி-தெலுங்கு பேசுவர். முற்காலத்தில் இவர்கள் தோல் தைக்கும் தொழில் செய்தனர். தற்போது தோட்டிகளாக இருக்கின்றனர்.