பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 509

            ஒப்பாரி


 எட்டு மணி வண்டியேறி-நாங்க 
 எளம் பசியா வந்தாக்கா 
 என்னா அடுப்பி லென்பா 
 எள்ளரிசிச் சாதம் என்பா 
 சத்திரத்து வாழை-நம்ம வாசலிலே 
 சரஞ்சரமாய்க் காய்த்தாலும் 
 முத்தத்து வாழை-நாங்க 
 முகம் வாடி நிக்கறமே 
 கள்ளி இடைஞ்சலிலே 
 கருங்கண்ணினாய் மின்னலிலே 
 கரும்பா வளர்ந்த மக-நாணிப்போ 
 கவலைக்கு ஆளானேன்.
 வேலி இடைஞ்சலிலே 
 வெள்ளரளிப் பின்னலிலே 
 வேம்பா வளர்ந்த மக-நானிப்போ 
 வேதனைக்கு ஆளானேன் 
 பத்து மலைக்கு அப்பாலே
 பழுத்த கனி வாழை 
 பழுத்த கனியிழந்தேன்-நாணிப்போ 
 பாசமுள்ள சொல்லிழந்தேன் 
 தங்க தமிளிலே 
 தண்ணிரு கொண்டு வந்தேன் 
 தண்ணிரு வேண்டாமின்னு 
 என்னைப் பெத்த அப்பா 
 தங்க ரதம் கேட்டியளோ 
 வெள்ளித் தமிளரிலே 
 வென்னிரு கொண்டு வந்தேன் 
 வென்னிரு வேண்டாமின்னு 
 என்னைப் பெத்த அப்பா 
 வெள்ளிரதம் கேட்டியளோ 
 அண்டா விளக்கி 
 அரளிப் பூ உள்ளடக்கி 
 அண்டாக் கவிந்த உடன் 
 என்னைப் பெத்தார்-நாங்க 
 அரளிப்பூ வாடினமே. 
 தாலம் விளக்கி 
 தாழம் பூ உள்ளடக்கி 
 தாலம் கவிழ்ந்த உடன்-நாங்க

A519-33