பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் நாட்டுப் பாடல்கள் தாழம் பூ வாடினமே நாளி மகிழம் பூ நாகப்பட்டினம் தாழம் பூ நடந்து வந்து சீர் வாங்க என்னப் பெத்த அப்பா நல்ல தவம் பெறலையே குறுணி மகிழம் பூ கும்பா வெல்லாம் தாழம் பூ கொண்டு வந்து சீர்வாங்க-நாங்க கோடி தவம் செய்ய லையே. குறிப்பு: சத்திரத்து வாழை. இது அவர்களது சகோதரர்களின் மனைவிமாரைக் குறிக்கும். அவர்கள் வேறிடத்தில் பிறந்து இந்த வீட்டில் வந்து புகுந்தவர்கள். அவர்களைத்தான் சத்திரத்து வாழை காய்த்துக் குலுங்குகிறது என்று குறிப்பிடுகிறாள். இந்த வீட்டு முற்றத்திலேயே வளர்ந்த வாழை என்று தன்னைக் கூறிக்கொள்ளுகிறாள். சேகரித்தவர்: இடம் : S.S போத்தை விளாத்திகுளம்,

       இலங்கையிலே
  மாண்டதென்ன?
    "தந்தை அயலூருக்கு வேலையாகச் சென்றார். அங்கே திடீரென்று நோய் கண்டு மாண்டுவிட்டார். அவருடைய மகள் பெரியவளாகி வீட்டில் இருக்கிறாள். அவளுடைய தம்பி சிறுவன். இவ்வாறு திடீரென்று தங்கள் குடும்பத்தினருக்குக் கேடுவர அவர்கள் என்ன பாவம் செய்தாதெரியவில்லை. தமது தோட்டத்திற்கு வரும் மயிலையும் குயிலையும் கூட அவர் விரட்டமாட்டார். இப்படியிருக்க அவருடைய குடும்பத்திற்கு ஏன் கேடு வந்து சேர்ந்தது என்று அவளும் அறிய முடியவில்லை. இவ்வினாக்களை எல்லாம் இறந்தவரைப் பார்த்துக் கேட்டு ஒப்பாரி பாடுகிறாள் மகள்.

பத்துப் பேர் சேவகரும் பழனிக்கே போகையிலே பத்துபேர்வந்தென்ன-நீங்க பழனியிலே மாண்டதென்ன?