பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாரி 511 எட்டுப் பேர் வந்த தென்ன?-நீங்க இலஞ்சியிலே மாண்ட தென்ன? எட்டுப் பேர் சேவகரும் இலங்கைக்கே போனதிலே எட்டுப் பேர் வந்ததென்ன-நீங்க இலங்கையிலே மாண்ட தென்ன? கூண்டு வண்டி கட்டி-நீங்க கோட்டைக்குப் போனாலும் கும்பா நிழலாடும்-பிடிக்க வந்த பெண் குயில் போல வாதாடும். மாட்டுவண்டி மந்தைக்கே போனாலும் மங்கு நிழலாடும் உங்களைப் பிடிக்க வந்த மென் மயில் போல வாதாடும் யானை மேல் ஜமக்காளம் நம்ம வாசலிலே அஞ்சு லட்சம் பஞ்சாங்கம் அருமை மகன் கொள்ளி வைக்க அருச்சுனர்க்கும் சம்மதமோ குதிரை மேல் ஜமக்காளம் நம்ம வாசலிலே கோடிப் பேர் பஞ்சாங்கம் குழந்தை மகன் கொள்ளி வைக்க குடும்பத்திலே சம்மதமோ செங்கச் சுவரு வைத்து செவ்வரளித் தோட்டம் வைத்து சிறு தாயைக் காவலிட்டு-நான் சீதை சிறையிருந்தேன் செங்கச் சுவரிழந்து செவ்வரளித் தோட்டம் அழிந்து சிறு நாயும் காலொடிஞ்சு-நான் சீதை கருகறேனே. மஞ்சச் சுவரு வச்சு மல்லிகைப் பூத்தோப்பு வச்சு மர நாயைக் காவலிட்டு-நான் மாது சிறையிருந்தேன். மஞ்சச் சுவரிடிஞ்சு