பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

512 தமிழர் நாட்டுப் பாடல்கள் மல்லிகைப் பூத் தோப்பழிஞ்சு மர நாயும் காலொடிஞ்சு-நான் மாது கருகறேனே மதுரைத் தலை வாசலிலே மஞ்சள் பழுத்திருக்கும் மரமல்லி பூத்திருக்கும் மறுமல்லி வாசத்திற்கு மயிலு வந்து கூடு கட்டும் மயிலை அடுக்கியளோ? மயில் கூட்டைப் பிச்சியளோ? மயிலழுத கண்ணிரு-நீங்க பெத்த மக்கள் மேல் சாடியதோ கோட்டைத் தலை வாசலிலே கொன்றை பூத்திருக்கும் குடமல்லி பூத்திருக்கும் குடமல்லி வாசகத்துக்கு குயிலு வந்து கூடு கட்டும் குயிலை அடிக்கியளோ? குயில் கூட்டைப் பிச்சியளோ? குயிலழுத கண்ணிரு-உங்க குழந்தை மேல் சாடியதோ? .குறிப்பு: இப்பாடல் பாடப்படும் இடங்களுக்கு ஏற்றாற் போல ஊர்களின் பெயர் மாறிவரும். குழந்தைமகன் தந்தையை இழந்த கொடுமைக்கு வருந்தி சகோதரி அழுகிறாள். தந்தை செய்த பாவங்களுக்கு குழந்தைகள் துன்பப்பட வேண்டும் என்ற கருத்து கிறிஸ்தவ சமயக் கருத்தாகும். இந்து சமய கர்மக் கொள்கையும், சமண மதத்தவரது மறுபிறப்புக் கொள்கையும், அவரவர் செய்த வினைகள் அவரவர் உயிரைத் தான் பற்றிக்கொண்டு விளைவுகளை ஏற்படுத்தும் என்று தான் சொல்லுகின்றன. ஆனால் சாதாரண மக்கள் தாய் தந்தையரின் வினை குடும்பத்தினரை தாக்கும் என்று நம்புகின்றனர். சேகரித்தவர்: இடம்: S.S போத்தையா விளாத்தி குளம், நெல்லை.