பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாரி சின்னத் தம்பி தன்னுடன் பிறந்த தம்பி இறந்து விட்டான். அவனைப் பெட்டிக்குள் அடைத்து புதைக்க எடுத்துப் போகிறார்கள். சகோதரி ஒப்பாரி பாடுகிறாள். தேக்கு பலகை வெட்டி தெய்வலோகப் பொட்டி பண்ணி பொட்டிக்குள்ளே சின்னத் தம்பி போகுதுன்னா சின்ன வண்டி சின்ன வண்டி உள்ளிருக்கும் சின்னத் தம்பி என் பிறப்பு குறிப்பு: தமிழ் நாட்டின் சில சாதியினர் பிணத்தைப் பெட்டியில் வைத்துப் புதைத்து மேலே சமாதி கட்டி லிங்கம் அல்லது கணபதியைப் பிரதிஷ்டை செய்கிறார்கள். உதவியவர்: இடம்: கவிஞர் சடைய்ப்பன் அரூர், சேலம் அவள் குறை அவள் விதவை. அவளது துன்பங்களைச் சொல்லி அழுதால் மரமும் உருகும்; பறவைகளும் கண் கலங்கும். என்ன குறையென்று அவள் சொல்லா விட்டாலும், விதவைக்கு நேரும், சமூகக் கொடுமைகளையும் குடும்பத் துன்பங்களையும், பல நாட்டுப் பாடல் மூலம் நாம் அறிந்துள்ளோமல்லவா? பூ மரத்துக் கீழ் நின்னு பொங் கொறை சொல்லி அழுதா பூ மரத்து மேலிருக்கும் புறாவும் இறை உண்ணாது மாமரத்துக் கீழ நிண்ணு மங்க குறை சொல்லி அழுதா மவிலும் இறை உண்ணாது. வட்டார வழக்கு: பொங்கொறை-பெண் குறை. உதவியவர்: இடம்: கவிஞர் சடையப்பன் சேலம் மாவட்டம்.