பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
514

தமிழர் நாட்டுப் பாடல்கள்


மேல் கூறிய கருத்துக் கொண்ட வேறு இரண்டு பாடல்கள் பின்வருமாறு :

எட்டு மலைக் கந்தாண்ட
ஈசுவரன் கோயில், அங்கே
ஈசுவரன் கோயிலிலே
இலந்தை படர்ந்திருக்கும்
இலந்தைப் பழம் உண்ண வரும்
எண்ணாயிரம் பச்சைக் கிளி
எங்கொறையைச் சொன்னாலே
இலந்தைப் பழம் உண்ணலையே-என் எண்ணங்களும் நீங்கலையே
பத்துமலைக் கந்தாண்ட
பரமசிவன் கோயிலண்ட
பாவை படர்ந்திருக்கும்
பழுத்தும் போப் பழமிருக்கும்
பாவைப் பழம் உண்ண வரும்
பத்தாயிரம் பச்சைக்கிளி
பாவி என் குறைக்கேட்டு
பாவைப் பழம் உண்ணலையோ-என்னுடைய பாதரவும் நீங்கலையே

வட்டார வழக்கு : பாவை-பாகல்; கொறை-குறை.

சேகரித்தவர்:
இடம்:
கவிஞர் சடையப்பன்
சேலம் மாவட்டம்.


ஏழையாம் என் தாய்

அவளுக்கு ஆயிரக்கணக்கான சுற்றத்தார் உண்டு. ஆனால் தாய் இறந்து விட்டாள். தாய் ஏழைதான். சுற்றத்தாரில் பணக்காரர்கள் பலர் உண்டு. ஆனால் வேதனைப்படும் காலத்தில் தாயின் அன்பைப் போல சுற்றத்தாரின் பெருமையும், பொருளும் அவளைத் தேற்றுமா?


எட்டு மலைக் கந்தாண்ட
இரும்பிக் கம்பி ஆச்சாரம்
எண்ணை நிழலோடும்
எடுக்கும் பட்சி சீட்டாடும்
எட்டு லட்சம் என் சனங்க
எனக் குதவி நின்னாலும்