பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாரி 515 ஏழையாம் என் தாயி எதிரில் வந்தார் சந்தோஷம். பத்து மலைக் கந்தாண்ட பவளக்கம்பி ஆச்சாரம் பாலும் நிழலோடும் பறக்கும் பட்சி சீட்டாடும் பத்து லட்ச என் சனங்க பக்கமாய் நின்னாலும் பால் கொடுத்த என் தாயி பக்கம் வந்தால் சந்தோஷம். வட்டார வழக்கு : ஆச்சாரம்-மாளிகை. சேகரித்தவர்: இடம்: கவிஞர் சடையப்பன் அரூர், சேலம் மாவட்டம். பூஞ்செடி தழைக்கலையே பிறவியிலேயே குழந்தை நோயுற்றிருந்ததால் அவள் நோய் தீர்க்கச் செய்த முயற்சிகள் வீணாயின. பிள்ளை இறந்து போனான். இளம் தாய் பாடும் ஒப்பாரி இது. தங்கக் குடமெடுத்து தாமரைக்குத் தண்ணிகட்டி தாமரை தழைக்க லையே தங்கக் கொடி ஒடலையே பொன்னுக் குடமெடுத்து பூஞ்செடிக்கு நீர் பாய்ச்ச பூஞ்செடி தழைக்க லையே பொன்னாக் கொடி ஒடலையே சேகரித்தவர்: இடம்: கவிஞர் சடையப்பன் அரூா, சேலம் மாவட்டம். சிவனும் அறியலையே மாங்கல்ய பாக்கியம் அருளும்படி அவள் தெய்வங்களை எல்லாம் பூசை செய்தாள். ஆனால் அவை கருணைகாட்ட