பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தெய்வங்கள்

வார்ப்புரு:47

சமைந்தால் சமயபுரம்,-மாரி சாதித்தாள் கண்ணாபுரம் கண்ணாடி புரத்தில்-மாரி காக்கும் பிரதானி-மாரிக்கு உடுக்குப் பிறந்ததம்மா! உத்திராட்சப் பூமியிலே பம்பை பிறந்ததம்மா-மாரிக்கு பளிங்கு மா மண்டபத்தில் வேம்பு பிறந்ததம்மா-மாரிக்கு விசய நகர்ப் பட்டணத்தில் ஆடை பிறந்ததம்மா-மாரிக்கு அயோத்திமா நகர்தனிலே சிலம்பு பிறந்ததம்மா-மாரிக்கு பிச்சாண்டி மேடையிலே சாட்டை பிறந்ததம்மா-மாரிக்கு சதுர கிரி பூமியிலே சாட்டை சலசலங்க- சதுர மணி ஓசையிட கருங்கச்சை குஞ்சம் விட பதினெட்டுத் தாளம் வர பத்தினியா சித்துடுக்கு இருபத்தொரு தாளம் வர எமகாளி சித்துடுக்கு சித்துடுக்கைக் கைப்பிடித்து சிவ பூணணிந்தவளாம்.

(மாரி ஸ்தலங்களாக ஆறு ஊர்கள் சொல்லப்படுகின்றன.)

சேகரித்தவர்:

S.Sபோத்தையா

இடம்:சூரங்குடி, விளாத்திகுளம் தாலுகா, நெல்லை மாவட்டம்.
   மாரியம்மன் பாட்டு -2

சின்ன முத்தாம் சிச்சிலுப்பைச் சீரான கொப்பளிப்பான்