பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

529

           ஒப்பாரி 

   போகுதையா பூந்தேரு 
   பூலோகம் தெத்தளிக்க 
   இண்டு மணக்குதையா 
   இடுகாடு பூமணக்கும் 
   வாயை மணக்குமையா 
   வைகுண்டம் பூமணக்கும் 
   இடு காடு தேரிறக்கி 
   எமலோகம் போறேனிண்ணார் 
   சுடுகாடு தேரிறக்கி 
   சொர்க்க லோகம் 
                 போறேனிண்ணார் 
   தேரை விட்டுக் கீழிறக்கி 
   செல்ல மக்கள் வந்து கூடி 
   பொன்னரசி கையிலெடுத்து 
   போட்டார்கள் வாய்க்கரிசி 
   சந்தனக் கட்டை வெட்டி 
   சதுருடனே தீ மூட்டி 
   கொள்ளி வச்சி குடமுடைச்சி 
   கோலவர்ணத் தேரவுத்து 
   செலவு தொகை தான் கொடுத்து 
   செல்ல மகன் தலைமுழுகி
   சிவ சிவா என்று சொல்லி 
   திருநீறும் தானணிந்தார்.


    குறிப்பு: இதில் சாவுச் சடங்குகள் வரிசையாக சொல்லப்படுகின்றன.


   சேகரித்தவர்.             இடம்: S.S. போத்தையா      விளாத்திகுளம்,
                 நெல்லை மாவட்டம்.


         மாரடிப் பாட்டு-3


   கவர்னர் தலைவாசலுல 
   கருத்த யானை கெட்டியிருக்க 
   கருத்த யானை கொம்பு தச்சி-இந்த 
   கவர்னர் துரை மாண்டதென்ன 
   வீமர் தலைவாசலுல 
   வெள்ளானை கெட்டியிருக்க 
   வெள்ளானை கொம்பு தச்சி 
   வீமர் துரை மாண்டதென்ன