பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

528

     தமிழர் நாட்டுப் பாடல்கள்


   ஏழு நிலைக் கோபுரமாம் 
   ஈஸ்வரனார் பட்டணத்தை 
   இருந்து ஆளப் போறியளோ 
   அஞ்சி நிலைக் கோபுரமாம் 
   ஐவரோட பட்டணமாம் 
   ஐவரோட பட்டணத்தை 
   அரசாளப் போறீயளோ 
   மூணு நிலைக் கோபுரமாம் 
   மூதாக்கள் பட்டணமாம் 
   மூதாக்கள் பட்டணத்தை 
   முடிசூட்டப் போறீயளோ 
   ஒத்துமையாய் ஊராரும் 
   உல்லாசத் தேர் துர்க்கி 
   பெத்த மகன் முன்னடக்க 
   பெரியோர்கள் பின்னடக்க 
   உற்ற மகன் முன்னடக்க 
   உற முறையாற் பின்னடக்க 
   சந்தியிலே போற ரதம் 
   தங்க ரதம் யாரு ரதம் 
   தருமரைப் பெற்றெடுத்த 
   தங்க ரதம் போகுதென்பார் 
   விதியிலே போற ரதம் 
   வெள்ளி ரதம் யாரு ரதம் 
   வீமரைப் பெற்றெடுத்த 
   வெள்ளிரதம் போகுதென்பார் 
   முக்குக்கு முக்கல்லவோ 
   முடிமன்னர் தோள்மாத்த 
   சந்திக்கு சந்தியல்லோ 
   சதிர் மன்னர் தோள்மாற்ற 
   முக்குத் திருப்பி விட 
   மூத்த மகன் எங்கே யென்பர் 
   மந்தையிலே தேரிறக்கி 
   மல்லிகைப்பூ சூறையிண்ணார் 
   கரையிலே தேரிறக்கி 
   கயிலாசம் போறேனிண்ணார்.
   வருகுதையா பூந்தேரு 
   வைகுந்தம் தெத்தளிக்க