பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

532 தமிழர் நாட்டுப் பாடல்கள்

இறந்ததும் மறைந்துவிட்டது. தமிழ் நாட்டில் படை எடுத்து வந்து மறவர் படையைத் தோற்றகடித்த பட்டாணியரை அவள் அறிவாள். கும்பினியார் வருமுன்பு அவர்கள்தான் தமிழ் நாட்டுப் பாளையங்களுக்குப் படையெடுத்து வந்தார்கள். அத்தகைய பட்டாணி ஒருவன்தான், தன் கணவனைக் கொன்று விட்டானோ என்று அவள் கேட்கிறாள். காலதூதர்களை பட்டாணிக்கு உவமித்துப் பேசுகிறாள்.

பட்டி லையும் பட்டு-நான் ஒசந்த விலைப் பட்டு ஒசந்த விலைப் பட்டிலே ஓடி விழுந்த மாயமென்ன மலையிலே மாதுலை மாதம் ஒரு பூ பூக்கும் இடையிலே ஒரு பெண் பிறந்தேன்-தான் எடை குறைச்சல் ஆனதென்ன சந்தனச் சடுக்கா வண்டி-நான் தனிமைப் பட்டாள் ஏறும் வண்டி சண்டாளி வாய்திறந்தா தலைவாசலுமே கூட்டமாகும் தனிமைகளைப் பார்த்திருந்து தலை வாசலுமே பிரண்டெழும் குங்குமச் சடுக்கா வண்டி குயிலாளே ஏறும் வண்டி கும்பினியாள் அழுது வந்தாள். கொல்லை எல்லாம் கூட்டமாகும் கொடுமைகளைப் பார்த்திருந்தால் கொல்லையுமே பிரண்டெழும் குங்கும நெல்லி மரம் கூட்டத்தார் வச்ச மரம் கொடுமைகளைச் சொல்லி அழுதா கோர்ட்டார் கச்சேரியும் கூடப் பிரண்டழும் பத்துத்தலை வாசலும் பதினெட்டு ஆசாரமும் ஆசார வாசலிலே ராஜாக்கள் வந்திறங்க அடிக்க வருவாரோ ஆளெண்ணிப் பாப்பாரோ