பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாரி 533

அடிக்க வர ராஜாவே ஐயா சரண மின்னே எட்டுத் தலைவாசலும் இருபத்தெட்டு ஆசாரமும் கொல்ல வரு வாரோ கொலங் குத்திப் பேசுவாரோ கொல்ல வர ராசாவே கோடி சரண மின்னே எட்டரங்காம் மாளிகையாம் எடுத்தெடுக்கும் தண்டியலாம் எடுத்தெடுக்கும் தண்டியலை எதிர்த்திருந்து எய்தானோ பத்தரங்காம் மாளிகையாம் பார்த்தெடுக்கும் தண்டியலாம் பார்த்தெடுக்கும் தண்டியலை பார்த்திருந்து எய்தானோ கோடி மாதுளம் பூவாம் கோட்டாற்றுத் தாழம் பூவாம் கோடி முடியு மின்னே குயில் பறந்த மாயமென்ன பதக்கு மாதலம் பூவாம் பருவமுள்ள தாழம் பூவாம் பாத்து முடியுமின்னே பறத்தோடிப் போனதென்ன அரங்கு துறந்து அரளிப் பதி உண்டுபண்ணி ஆண்டியார் வாழ்வதற்கு அரும் பெடுத்தும் சாத்தலையே பொட்டி துறந்து பூப்பதிகள் உண்டு பண்ணி பொண்ணடியாள் வாழ்வதற்கு பூவெடுத்துச் சாத்தலையே அல்லிப் போல் பொண்ணும் அருச்சுனன் போல் மாப்பிள்ளையும் அல்லிப் போல் வாழ அழைத்தார் தஞ்சமின்னே