பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

534 தமிழர் நாட்டுப் பாடல்கள்

சீதை போல் பொண்ணும்

     ராமர் போல் மாப்பிள்ளையும் 
     சீதை போல் வாழ 
     சீமை பொறுக்கலையே 
     ஆனை அலங்காரம் 
     அம்பாரிச் சிங்காரம் 
     ஆனைமேல் பட்டாணி 
     அம்பு கொண்டு எய்தானோ 
    குதிரை அலங்காரம் 
    கூடாரச்சிங்காரம் 
    குதிரைமேல் பட்டாணி 

கொம்பு கொண்டு எய்தானோ.

 குறிப்பு: இப்பாட்டு தமிழ் நாட்டில் பட்டாணியரும் கும்பினியாரும் சேர்ந்து மறவர் பாளையங்களை அடக்கிய காலத்தில் தோன்றியிருக்கலாம். பட்டாணியை வருணிக்கும் பொழுது தற்கால லேவாதேவிக்காரனாக வருணிக்காமல் ஆனைமேல் அம்பாரி வைத்து ஏறி வருபவனாகவும் கூடாரத்தில். வாழ்பவனாகவும் வருணித்திருக்கிறது. இது படையெடுத்து வந்த பட்டாணியரையே குறிக்கும். மறவர் பாளையங்களை அடக்கி வந்த மாபூஸ்கான் கான்சாகிப் ஆகியோர்களைப் பற்றிய நினைவு சிறிது காலத்திற்கு மறவர் பாளையங்களில் மங்கவில்லை. அதற்கடுத்து இருபது வருடங்களுக்குள்ளாக, கும்பினியார் ஆட்சி நிண்லத்துவிட்டது. இப்பாடலில் இறந்து போனதாகச் சொல்லப்படும் மனிதன் இச் சண்டைகளில் இறந்தவனாக இருக்கலாம். வழக்கமாகக் கால தூதர் வருகையைக் குறிப்பிடும் ஒப்பாரி "ஆசார வாசலில் ராஜாக்கள் வந்திறங்க" என்றும், "கொல்ல வருவாரும் கொலங்குத்திப் பேசுவாரும்” என்றும் கூறுகிறது. எனவே இவனுக்கு ஏற்பட்ட சாவு இயற்கை சாவு அல்ல என்று தோன்றுகிறது. இக் காரணங்களால், இப்பாடலின் முக்கிய பகுதிகள் சுமார் 230 வருடங்களுக்கு முன்னால் பாடப்பட்டிருக்க வேண்டும் என்று கூறலாம்.

சேகரித்தவர்: இடம்: எஸ்.எம். கார்க்கி நெல்லைமாவட்டம்.