பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெய்வங்கள் 49 உத்திராட்ச மேடையிலே, கரகம் பிறந்ததம்மா, கண்ண நல்லூர் மேடையிலே, சூலம் பிறந்ததம்மா துலுக்க மணி மண்டபத்தில், நாகம் குடைப்பிடிக்க, மாரியாத்தாளுக்கு நல்லபாம்பு தாலாட்ட, முத்து மணி விளக்காம் மாரியாத்தாளுக்கு முதல் மண்டபமாம். சக்தி உடையவளே! சாம்பிராணி வாசகியே! நாழியிலே முத்தெடுத்து மாரியம்மா நாடெங்கும் போட்டுவந்தாள். உழக்கிலே முத்தெடுத்து மாரி ஊரெங்கும் போட்டு வந்தாள். எல்லை கடந்தாளோ இருக்கங்குடி மாரியம்மா, முக்கட்டுப் பாதைகளாம், மூணாத்துத் தண்ணிகளாம், மூணாத்துப் பாதையிலே இருந்து மாரியம்மா வரங்கொடுப்பாள். தங்கச் சரவிளக்காம் மாரிக்குத் தனித்திருக்கும் மண்டபமாம், எண்ணெய்க் கிணறுகளாம் மாரிக்கு எதிர்க்கக் கொடிமரமாம். தண்ணீர்க் கிணறுகளாம் மாரிக்குத் தவசிருக்கும் மண்டபமாம் சப்பரத்து மேலிருந்து சக்தி உள்ள மாரி அவ. சரசரமாமாலை, மாலை கனக்குதுணு மயங்கிவிட்டாள் மாரி. ஆத்துக்குள்ள அடைகிடக்கு அஞ்சுதலை நாகம் அது ஆளைக் கண்டால் படமெடுக்கும் அம்மா சக்தி வேப்ப மரத்தவே துருங்கடி, மாரிக்கு வெத்திலைக் கட்டவே பறத்துங்கடி. வேர்த்து வார சந்தன மாரிக்கு வெள்ளிக் குஞ்சம் போட்டு வீசுங்கடி