பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

544

தமிழா் நாட்டுப் பாடல்கள்




கோடி பணம் இல்லாத -எங்கப்பன் வீட்டு
கோட்டை போய் பார்க்கலையே

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

தருமபுரி மாவட்டம்.

மாண்டதென்ன திண்ணையிலே

கணவன் திடீரென்று மாரடைப்பால் இறந்து விட்டான். அவன் திடீர் மரணத்தைக் குறித்து வருந்தி துடி துடித்து மனைவி அழுகிறாள்.

சோப்பு படி கிணறு
சோமம் துவைக்கும் கல்லு
சோப்பு பெட்டி இங்கிருக்க-நீங்க
சோர்ந்ததென்ன திண்ணையிலே
மல்லு துவைக்கும் கல்லு
மாசிப்படி கிணறு
மல்லு பெட்டி இங்கிருக்க-நீங்க
மாண்ட தென்ன திண்ணையிலே
கருத்த புளியங் கொட்டை
கருத்தா பொழைக்குதுங்க-நான்
கஸ்தூரி நல்ல மஞ்சா
கனங் கொறஞ்சி நிக்கறனே
செவந்த புளியங் கொட்டை
சீரா பொளைக்குதுங்கோ-நான்
சேலத்து நல்ல மஞ்சா
சீரழிஞ்சு நிக்கரனே


உதவியவா்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

தருமபுரி மாவட்டம்.


இளராசா கைக்குழந்தை

சிறு குழந்தைகளை தாயின் பொறுப்பில் விட்டு விட்டு தந்தை இறந்துவிட்டான். அவன் மனைவியின் ஒப்பாரி இது. இதில் வரும் உவமைகள், குறிப்புகள் எல்லாம் பனை, பனையேறும் தொழில் முதலியவற்றைச் சார்ந்தனவாக இருக்கின்