பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாாி

545


 றன. எனவே இது நாடார் குலத்தினரின் ஒப்பாரியென்று தோன்றுகிறது.

பத்துப் பனையோலை
பாடும் குருத்தோலை
பாடி முடிக்கு முன்னே
பகவான் அழைச்சானோ?
சாஞ்ச பனையோரம்
சம்பா நெல் காயப்போட்டேன்
சம்பா நெல் அள்ளு முன்னே
சங்குச் சத்தம் கேட்டதென்ன?
தங்க தம்ளரிலே
தண்ணீரா கொண்டு வந்தேன்
தண்ணிரோ தேவையில்லை
தங்கரதம் தேவையாச்சே
தக்காளிப் பூப் பூக்கும்
தரம் தரமாய்க் காய்காய்க்கும்
தரங்கெட்டார் வாசலிலே
தள்ளிக்கொண்டார் மாலையிட்டா
கோவை படர்ந்திருக்கும்
கொடி கொடியாய் காய்ச்சிருக்கும்
கொணங் கெட்டார் வாசலிலே
கூட்டிக் கொண்டார் மாலையிட்டாா
பாலுத்தி பாத்தி கட்டி
பாக்கு மரம் உண்டு பண்ணி
பாக்கு முத்தி தோப்பானோம்
பாலர் எல்லாம் கைக்குழந்தை
இஞ்சி வச்சா புஞ்சிறங்கும்
மணல் போட்டால் வேர் இறங்கும்
இஞ்சி முத்தித் தோப்பானோம்
இளராசா கைக்குலந்தை

குறிப்பு: தன் கணவன் வீட்டார் தன்னைக் கொடுமையாக நடத்தி வந்ததை 'குணங்கெட்டார் வாசல்', 'தரங்கெட்டார் வாசல்' என்ற சொற்றொடர்களால் குறிப்பிடுகிறாள் மனைவி. அவன் இறந்ததன் பின்னர் எப்படி அவர்கள் நடத்துவார்கள் என்பதை எண்ணி இரக்கம் கொண்டு அவள் அழுகிறாள்.

சேகரித்தவர்:

இடம்;

M.P.M. ராஜவேலு

தூத்துக்குடி வட்டாரம்,

நெல்லை மாவட்டம்.