பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

548

தமிழா் நாட்டுப் பாடல்கள்




தங்கலைட் டெரியும்
தனிக் காந்தம் நிண்ணெரியும்--இப்போ
தங்க லைட்டுமில்லை -- எனக்கு
தனிக்காந்தம் பக்கமில்லை
பொன்னு வளவளச்சி
பூவாரந் தொட்டி பண்ணி
பூவாரத் தொட்டியிலே
பொண்ணா படுத்திருந்தா--எனக்குப்
பொன்னு லைட்டெரியும்
புதுக்காந்தம் நிண்ணெரியும்--இப்ப
பொன்னு லைட்டு மில்லே
புதுகாந்தம் பக்கமில்லை.

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

சேலம் மாவட்டம்.

குழந்தையில்லாப் பாவி

அவளுக்குக் கோடி போடக் குழந்தையோ, அண்ணனோ இல்லை. அனாதை போலப் பரிதவிக்கிறாள்.

குச்சடி மேல் பலகை
குதிரை வால் முந்தாணி
கொண்டு வந்து கோடி போட-நான்
குழந்தை யில்லாப் பாவியானேன்
அச்சடி மேல் பலகை
ஆணைவாய் முந்தாணி
அழச்சி வந்து கோடி போட-நான்
அண்ணனில்லாப் பாவியானேன்

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

சேலம் மாவட்டம்.

அழாதே தங்கையரே

இதற்கு முந்தைய ஒப்பாரிகள் தாய் தந்தையரை இழந்த ஒரு பெண் தன் தாய் வீடு சென்றால், அங்கு அண்ணன் மனைவி