பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

550

தமிழா் நாட்டுப் பாடல்கள்




சீனா மரிக் கொழுந்து
சீட்டெழுதும் பின்னாங்கு
சீரா கொடுத்திருந்தால்
சின்னச் சொல்லு ஏன் வருது
பீனா மரிக் கொழுந்து
பேரெழுதும் பின்னாங்கு
பேரா கொடுத்திருந்தால்
பெரிய சொல்லு ஏன் வருது
குளத்தங்கரை யோரம்
குதிரை வந்து மண்டியிடும்
குதிரைக்கும் சங்கிலிக்கும்
குலம் பார்த்துக் கோத்திருந்தால்- எனக்கு
குறைவு வந்து நேராது
ஆத்தங்கரை யோரம்
ஆனை வந்து மண்டியிடும்
ஆனைக்கும் சங்கிலிக்கும்
அளவு பார்த்துப் பூட்டிருந்தால்-எனக்கு
அலப்பு வந்து நேராது
கல் பொறுக்கும் சீமையிலே-என்னை
கட்டிக் கொடுத்தாங்க
கல்லைப் பொறுக்கு வேனோ எங்கப்பன் வீட்டு
காதவழி சேருவேனே
முள்ளெடுக்கும் சீமையிலே-என்னை
முடிஞ்சி கொடுத்தாங்க
முள்ளைப் பெருக்குவேனோ
எங்கப்பன் வீட்டு
முல்லை வனம் சேரு வேனா.

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

தருமபுரி மாவட்டம்.

மலடு இண்ணும் சொன்னாங்க

தூர தேசத்தில் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்து விட்டனர் அவளது பெற்றோர். அதனால் அவள் தாய் வீட்டிற்கு அடிக்கடி வரமுடியவில்லை. தந்தை இறந்த செய்தி கேட்டு, வருகிறாள். குழந்தைப் பேறு பெறாத அவள் தான் 'மலடு' என்னும் பட்டம் பெற்று, தாய் தந்தையரையும் அடிக்கடி பார்க்க முடியாத துர தொலைவில் இருந்து வாடுவதாகக்