பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

552

தமிழர் நாட்டுப் பாடல்கள்




அப்பனும் கிடைக்கவில்லை

தன் புகுந்த வீட்டில் ஒரு பெண் பாடிக் கொண்டே மோர் கடைந்து கொண்டிருக்கிறாள். அவள் தந்தை இறந்து போனதாகத் தந்தி வந்தது. தான் தந்தியில் செய்தியைக் கேட்டதுமே தந்தையின் சாவுக்கு அடிக்கும் பறமேளம் தனக்கு கேட்டதாகவும், ஒடி வந்தும் தந்தையை உயிரோடு பார்க்கக் கிடைக்கவில்லையென்றும் கூறி அழுகிறாள்.

பானையிலே தயி ரெடுத்து
பாங்கான மத் தெடுத்து
பாடி கடையும் போது
பறமோளம் கேட்ட தென்ன?
யார் வீட்டு மோள மின்னும்
ஆராஞ்சி நான் பார்த்தன்
தாய் வீட்டு மோள மிண்ணும்
தந்தியிலே வந்த தெண்ணா
முந்தாணி தாரை விட்டு
முதல் மயிரைச் சிக்கொடைச்சி
அப்படியே ஒடிட்டேன்
அப்பனும் கிடைக்கவில்லை
அண்ட கதியத்தன்
அல கொலஞ்சி நிக்கரனே

வட்டார வழக்கு: பறமோளம்-சாவு வீட்டில் அடிக்கும் மேளம்; அலகொலஞ்சி-நிலைகுலைந்து.

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

தருமபுரி மாவட்டம்.

காதம் போய் நில்லச் சொன்னாள்

அவள் தாய் தந்தையரை இழந்து விட்டாள். அவளது தாய் தந்தையர் அவளைச் செல்லமாக வளர்த்தது, இப்பொழுது அவளது அண்ணன், அண்ணி இருக்கும் பெரிய மெத்தை வீட்டில்தான். ஆனால் அவர்களது மரணத்திற்குத் தான் தன் துக்கம் தீர அழவேண்டுமென்றால் கூட அண்ணி "இந்த வீட்டில் அழக்கூடாது; வேறு எங்காவது போய் அழு," என்று கூறியதும், தனக்கு முன்னம் சொந்தமாக இருந்த நிலையையும் தற்போது இருக்கும் நிலையையும் எண்ணி அழுகிறாள்.