பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாாி

555


 போகிறான். என்னதான் மற்றப் பிள்ளைகளைச் சீராட்டினாலும் தாய் தந்தையர் இறந்த பின்பு கருமஞ் செய்யவும், கொள்ளி வைக்கவும் வயிற்றில் பிறந்த மகன் தானே உரிமையுள்ளவனாக வும், அப்படிப் பெற்ற பிள்ளை கருமம் செய்வதற்குக் கொடுத்து வைக்கும் பெற்றோர்கள், ஒரு குறைவும் இல்லாதவர்கள் என்று நம் சமூகம் சொல்கிறது. கருமஞ் செய்யப் பிள்ளையில்லாதபடி கொடுத்து வைக்காதவராக ஆகி விட்டீர்களே, ஆகி விட்டோமே என்பதை எண்ணி ஏங்குகிறாள் புருஷனை இழந்த ஒரு பெண்.


ஆத்துக் கந்தாண்ட
அன்னலறி பின்னமரம்
அரும் பெடுத்துப் பூசை செய்தும்
அருங் கொளந்தைப் பஞ்சமாச்சி.
கொளத்துக்கு அந்தாண்ட
கொழுந்து வரி பின்னமரம்
கொழுந் தெடுத்துப் பூசை செய்தும்
கொளந்தைப் புள்ளை பஞ்சமாச்சி
கணுங்காலு தண்ணியிலே
காசு நிறைஞ்சிருக்கும்
காசெடுக்கப் பிள்ளையுண்டு-எனக்கு
கருமஞ் செய்ய பிள்ளையில்லை
முழங் கால் தண்ணியில
முத்து நிறைஞ்சிருக்கும்
முத்தெடுக்கப் பிள்ளையுண்டு-எனக்கு
முன்னே செல்லப் பிள்ளையில்லே

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

தருமபுரி மாவட்டம்.

பெண்ணாய்ப் பிறந்த குறை

அவள் தன் கணவனை இழந்து விட்டாள். புகுந்த வீட்டிலோ புருஷன் போன பின்பு மதிப்பில்லை. விதவைக் கோலத்தோடு பிறந்தவீடு சென்று என்ன பயன்? தான் கணவனுடன் வாழும் காலத்தில் தனக்கு இருந்த மதிப்பு எந்த இடத்திலும் இப்பொழுது இருக்காது. நடைப்பிணமாக வாழ வேண்டியதுதான் என்பதை அவள் உணர்ந்தாள். தான் பெண்ணாய்ப் பிறக்காமல் ஆணாய்ப் பிறந்திருந்தால், தந்தைக்குப் பின் தான் வீட்டிற்கு உரிமை