பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

556

தமிழா் நாட்டுப் பாடல்கள்


 உள்ளவளாக இருக்கலாம். எந்தவித சுதந்திரமும் உண்டு, அல்லது கோயில் சிலையாகப் பிறந்திருந்தாலாவது மாதம் ஒரு முறையா வது பூசைகள் நடக்கும். ஆனால் பெண்ணாய்ப் பிறந்த குறை ஒன்றினாலேயே தான் இவ்விதம் புலம்பி அழும் நிலைமை ஏற்பட்டதை எண்ணி மேலும் அழுகிறாள்.

அண்டங்காய் காய்க்கும்
அலரி பூ பிஞ்சிறங்கும்
ஆணாய் பிறந்திருந்தால்
அப்பன் வீட்டு அரண்மனையில்
அம்பெடுப்பேன் வில்லெடுப்பேன்
மாரியம்மன் கோயிலண்டை
மண்ணாய்ப் பிறந்திருந்தால்-எனக்கு
மாசம் ஒரு பூசை வரும்
பெண்ணாய்ப் பிறந்த குறை
புலம்பிக் கிடக்கலாச்சு

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

தருமபுரி மாவட்டம்.

பொறந்த இடம் சீரழிஞ்சேன்

இதுவும் பிறந்த வீட்டில் தந்தையின் பெருமையை நினைத்து அழும் மகளின் ஒப்பாரிப் பாடலாகும்.

புள்ளித் தலையாணி
பொறந்த இடம் கச்சேரி
புள்ளி நிறங் கொலஞ்சன்
பொறந்த இடம் சீரழிஞ்சேன்
பட்டு தலையாணை பாட்டன் வீடு கச்சேரி
பட்டு நிறங் கொலஞ்சன்
பாட்டன் வீடு சீரழிஞ்சேன்

வட்டார வழக்கு: தலையாணை-தலையணை கொலஞ் சன்-குலைந்தேன்.

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

தருமபுரி மாவட்டம்.