பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாாி

557




பாம்பு ரெண்டு சிறுது

அண்ணன்மார்கள் வீட்டுக்குப் போகிறாள் தங்கை. ஆனால் அவளுடைய அம்மாவும் அப்பாவும் உயிரோடு இல்லை. அண்ணிமார்கள்தான் இருக்கிறார்கள். அவர்கள் நாத்தியை அண்ட விடவில்லை. எங்கே தங்களின் உரிமைகளுக்கு இடைஞ்சலாக இருப்பாளோ என்று அவளைக் கொடுமைப் படுத்துகிறார்கள். தன் பிறந்த வீட்டையும், தாய் தந்தையரையும், தாகத்திற்கு உதவும் நல்ல தண்ணீராகவும், அத்தகைய நல்லவர்கள் இருந்த இடத்தில் இப்பொழுது இருக்கும் அண்ணன்மார்களின் மனைவியர் அட்டை, பாசி முதலியனவாகவும், அவர்களது குணங்கள் ஆமை, பாம்பைப்போல் சீறும் தன்மையுடையனவாகவும் இருப்பதை ஜாடையாக வருணித்து அழுது புலம்புகிறாள்.

அஞ்சி கிணற்று தண்ணி
அருங்குளத்து நல்ல தண்ணி
அள்ளிக் குடிக்க போனா
அட்டை மிதக்குது
ஆமை ரெண்டு சிறுது
பத்து கிணற்று தண்ணி
பாங்கிணற்று நல்ல தண்ணி
பார்த்துக் குடிக்கப் போனா
பாசை மிதக்குது பாம்பு ரெண்டு சிறுது

வட்டார வழக்கு அஞ்சி-ஐந்து பாசை-பாசி.

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூா்,

தருமபுரி மாவட்டம்.

நடுவில் வர அஞ்சரனே

அவள் கணவனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள். கணவன் திடீரென்று இறந்து போனான். அவளுடன் சேர்ந்த மற்றைய பெண்கள் தங்கள் கணவனுடன் சந்தோஷமாக வாழ்வதைக் காண்கிறாள். அவரவர்கள் சொந்த வீட்டில் சுப காரியங்களை அவர்கள் முன்னின்று நடத்துகின்றனர். அதே போல் அவளும் நாலு பேர் முன்னிலையில் வரமுடியுமா? நல்ல காரியங்களில் பங்கெடுத்துக் கொள்ள முடியுமா? விதவை இவற்றிற்கெல்லாம் விலக்கப்பட்டவள் தானே தன்னை மல்வி கைப் பூவாகவும், ஆனால் தான் உபயோகமில்லாமல் வாடும்

A519 - 36