பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாாி

561


 சத்தில்லாத உளுத்தங் கூழுக்காக பாரமான உலக்கை தூக்கி பருப்பு இடிக்க வேண்டி இருக்கிறது. இப்படியும் தான் உயிர் வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டதே என்று நினைத்துப் புலம்புகிறாள்.

எட்டு மலைக்கந்தாண்ட
ஈஸ்வரன் கோயிலாண்ட
எள்ளு ஒணத்திருக்கும்
இரும்புலக்கை சாத்திருக்கும்
ஈ விழுந்த கூழுக்காக-நான்
இரும்புலக்கை தூக்கலாச்சு
பத்து மலைக்கந்தாண்ட
பரமசிவன் கோயிலாண்ட
பருப்பு ஒணத்திருக்கும்
பார உலக்கை சாத்திருக்கும்
பாசை விழுந்த கூழுக்காக--நான்
பார உலக்கை துக்கலாச்சே

வட்டார வழக்கு: பாசை-பாசி.

சேகரித்தவர்.

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

தருமபுரி மாவட்டம்.

குயிலு போயி எங்கடையும்

அவளுக்கு அவள் கணவன் நந்தவனம். அந்த நந்தவனத்தில் குடியிருக்கும் குயிலும், மயிலும் போன்றவள் அவள். நந்தவனத்திற்கு சேதம் வந்து விட்டது. நந்தவனம் பட்டுப் போய் விட்டது. அவள் நந்தவனம் போன்ற கணவனை இழந்தபின்பு எங்கே போவாள்? அவள் கதி என்ன? என்று எண்ணி வேதனை யடைகிறாள்.

குட்ட புளிய மரம்
குயிலடையும் நந்தவனம்
குட்டை மரம் பட்டுப் போச்சு
குயிலு போய் எங்கடையும்
மட்ட புளிய மரம்
மயிலடையும் நந்தவனம்