பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

562

தமிழர் நாட்டுப் பாடல்கள்




மட்ட மரம் பட்டுப் போச்சு
மயிலு போயி எங்கடையும்

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

காெங்க வேம்பு,

தருமபுரி மாவட்டம்.

தாங்க முடியலியே

புகுந்த வீட்டின் கொடுமைகளுக்கு ஆளாகிறாள் அவள் மற்றவர்களின் கொடுமைகளுக்கு மத்தியில் அவள் இருப்பது ஈச் முள்ளும் தாழை முள்ளும் குத்துவது போன்ற ஓயாத தொல்லையைத் தருகிறது.

ஈச்ச முள்ளு பள்ளத்திலே
இருந்தே சில காலம்
ஈச்ச முள்ளு குத்தரது
இருக்க முடியலையே
தாள முள்ளு பள்ளத்திலே
தங்கியிருந்தேன் சில காலம்
தாள முள்ளு குத்துது,
தாங்க முடியலியே

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

தருமபுரி மாவட்டம்.

மூடு பனி ஆத்துவேனோ

அவள் கணவன் இறந்து போனான். அவன் இருந்த வை அவள் சந்தோஷமாக அவனோடு வாழ்க்கை நடத்தினாள் அத்தகைய வாழ்க்கையைத் தந்த அவள் கணவன் முத்து மலை பவள மலை என்று கற்பனை செய்து பின் அந்த முத்து மலை பவள மலைகளை கஷ்டம் என்னும் மூடுபனி மறைத்ததை போன்று அவள் கணவனும் மரணம் என்னும் மூடு பனியா மறைக்கப்பட்டு விட்டான். மூடுபனி ஒரு காலம் விலகிவிடும் ஆனால் இறந்த கணவனை அவள் திரும்பக் காண்பாள காணத்தான் முடியுமா?

முத்து மலை மேலே
மூடு பனி பேயுதுங்க