பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெய்வங்கள் 51 உடலில் முத்துக்கள் ஆயிரக் கணக்கில் தோன்றுவதால் இவளுக்கு ஆயிரத்தாள் என்றும், மாரியோடு கலந்து விட்டதால் முத்து மாரியென்றும், தேசம் முழுவதும் பரவி இருப்பதால் தேச முத்துமாரி என்றும் பல பெயர்கள் வழங்குகின்றன. நவராத்திரி உற்சவத்தின்போது இவள் சிம்ம வாகனத்தில் ஏறி வருவாள். பெண்கள், இவள் புகழ் பாடிக் கும்மியடிப்பார்கள். கீழ் வரும் பாட்டு சேலம் மாவட்டத்தில் வழங்குகிறது. நாலு காலச் சட்டம் நடு நிறுத்தி நட்சத்திரம் போலே ஒரு தேர் எழுப்பி தேருக்கு ஒடையாளி தேசமாளும் முத்தம்மா தேரேறி வருவதைப் பாருங்கடி ஒலைப் பொட்டி தலை மேலே ஒம்பது மக்களும் கக்கத்திலே மக்களைப் பெத்த மாரியம்மன் மவுந்து வருவதைப் பாருங்கடி. சேகரித்தவர். இடம்: வாழப்பாடி சந்திரன் வாழப்பாடி, சேலம் மாவட்டம்.