பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெய்வ கணங்கள் கிராம மக்கள் நூற்றுக்கணக்கான தெய்வங்களை பெயர் கொடுத்து அழைக்கிறார்கள். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி உண்டென்று நம்புகிறார்கள். கோயில்பட்டி அருகிலுள்ள சிற்றுரர்களில் மக்களால் வணங்கப்படும் தேவதைகளின் பெயர்களை இப்பாட்டில் நாம் காண்கிறோம். முனியசாமி, ஐயனார், கண்ணாத்தா, பாப்பாத்தி, உலகம்மன், பெத்தனாட்சி ஆகிய பெயர்களை இப்பாட்டிலிருந்து நாம் அறிகிறோம். கிராமமக்கள், மேலே குறிப்பிட்ட தேவதைகளை மட்டுமின்றி முஸ்லிம் தர்க்காக்களுக்கும் நேர்ந்து கொள்வதுமுண்டு. விசேஷக் காலங்களில் முஸ்லிம்களது யாத்திரை ஸ்தலங்களுக்கும் போவதுண்டு. முத்து முனிய சாமி மூர்க்கமுள்ள தேவதையே சத்தத்தை நீ கொடய்யா சரளி விட்டு நான் பாட ஊருக்கு நேர் கிழக்கே உறுதியுள்ள ஐயனாரே சத்தத்தை நீ கொடய்யா! சரளி விட்டு தான் படிக்க, நாட்டரசன் கோட்டையிலே நல்ல தொரு பாப்பாத்தி வயித்தவலி தீர்த்தாயானால் வந்திருவேன் சன்னதிக்கு ஒட்டப் பிடாரத்திலே உலகம்மன் கோயிலிலே பூக்கட்டிப் பார்த்தேன் பொருந்தலையே என் மனசு கண்ணுலே அடிச்சுத்தாரேன் கண்ட சத்தியம் பண்ணித்தாரேன். சிக்கந்தர் மலைக்கு வாங்க சேலை போட்டுத் தாண்டித் தாரேன்.