பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெய்வங்கள் 53 பூப்பூக்கும் புளியமரம் பொன்னிலங்கும் ஐயனாரு நாட்டி லங்கும் பெத்தனாச்சி நல்லவரம் தருவா. ஏழுமலை கடந்து எடுத்து வந்தேன் சண்பகப்பூ வாடாமல் சாத்தி வாரும் வட மதுரைக் கந்தனுக்கு. வட்டார வழக்கு: பாப்பாத்தி-பிரம்ம ராக்கி சக்தி; ஐயனாரு சாஸ்தா. சேகரித்தவர்: இடம்: S.S. போத்தையா விளாத்திக்குளம், திருநெல்வேலி. நாட்டு அரசன் கோட்டையிலே நல்லதொரு கண்ணாத்தா வயித்தவலி தீர்த்தியானா வந்திருவேன் சன்னதிக்கே. வட்டாரவழக்கு: கண்ணாத்தா-கண்ணகியைக் குறிக்கும். சேகரித்தவர்: இடம்: S.P.M. ராஜவேலு மீளவிட்டான் வருணன் மனித உழைப்பில் குறைவில்லை. உழுதான், கடலை விதைத்தான். மழை வருவதுபோன்ற அறிகுறி வானத்தில் தோன்றியது. ஆனால், திடீரென்று வானம் வெளிறிற்று. வந்த மழை பெய்யாது போய்விட்டது. அவன் மனம் ஏங்குகிறது. இனி அவனால் என்ன செய்ய முடியும்? நினைத்த நேரத்தில் மழை பெய்யவைக்கக்கூடிய கற்பரசி அவன் பக்கத்தில்தான் இருக்கிறாள். அவளைப் பார்த்து, வருணன் செயலை நினைத்து வருந்துகிறான். அவளால் என்ன செய்ய முடியும்? விஞ்ஞானம் இன்னும் வருணனைப் பணிய வைக்கவில்லையல்லவா? இத் துறையில் முயற்சி நடப்பதையே நமது உழவன் அறிந்திருக்க மாட்டானே! வாகை மரத்துப் புஞ்சை வட்டாரச் சோளப் புஞ்சை