பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாரி

567



விட்டேனே" என்று மனம் வெதும்பி பெற்ற வயிறு பற்றியெரிய அழும் தாயின் பரிதாபமான கதறல்.

வரமா வரங்கெடந்து
வாசு தேவன் வரம் வாங்கி
பந்தலிலே போட்டாலே
பாவ தோஷம் அடிக்கிமிண்ணு
குழியிலே போட்டாலே
குழி தோஷம் அடிக்கிமிண்ணு
அங்கத்தை இறுக்கிக் கட்டி
அடி வயிறு தொட்டி லிட்டு
நானாட்டும் தொட்டிலிலே
எமனாட்ட விட்டேனே

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

தருமபுரி மாவட்டம்.

விருந்திட்டவள் விதவையானாள்


கணவனை மகிழ்விக்கும் பணிவிடைகளிலும், கடமைகளிலும் ஒன்றாகும், அவனுக்குப் பிடிக்கும் கறி வகைகளை அறிந்து பின் சமையல் செய்து பக்கத்தில் இருந்து பரிமாற கணவன் ருசித்து உண்டு திருப்தியாவதை மனைவி கண்டு களிப்பதாகும். மேற்கூறிய வகையைச் சேர்ந்த ஒரு மனைவி கணவனுக்குச் சமைப்பதில் மிகுந்த அக்கறை காட்டி நெல் வருவிப்பது முதல் அதை அரிசியாக்கிப் பின் சாதமாக்கி வைப்பதுடன் அதற்கேற்ற கறிவகைகளையும் வகை வகையாகச் செய்து ஊறுகாய்கள் பலவிதம் தயார் செய்து பின் கணவனைப் பல் விளக்குவதிலிருந்து வாய் கொப்பளிப்பது முதல் விசேஷ கவனிப்புச் செய்து சிறந்த வாழைகளிலிருந்து தலைவாழையிலை கொண்டு வரச் செய்து இலைமேல் நீர் தெளிப்பதற்கு பதிலாக இளநீரைத் தெளித்து சோற்றைக் கொஞ்சம் வைத்துச் சத்து நிறைந்த காய்கறி வகைகளை அதிகம் வைத்து தன் கணவன் பசியாறி உண்ட களைப்புத் தீர, திண்ணையிலே மெத்தையிலே அமர்ந்து சிரமபரிகாரம் செய்து கொண்ட தன் கணவன் இறந்ததினால் வெறிச் சென்று கிடக்கும் மெத்தையையும் பார்வையில்லாமல் இருக்கும் திண்ணையையும் கண்டு பழைய நினைவுகள் வரப் பெற்று அழுது கொண்டே அவள் கணவனுக்குச் செய்த சேவைகளை வாய் விட்டுக் கூறி அரற்றுகிறாள்.