பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாாி

569



சன்னலிலே கை கழுவி
சாந்திருக்கும் திண்ணையிலே-நீங்க
சாந்திருந்த மெத்தை யெல்லாம்
சலிப்படைஞ்சி கிடப்ப தென்ன


வட்டார வழக்கு: அவிச லேறி-தரம் குறைந்து; வெங்கா ரம்-நெடி, உண்னொரு -இன்னொரு.


சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

தருமபுரி மாவட்டம்.

சீரழிந்தேன்

அவள் சிறுவயது முதல் செல்வமாகவும் அருமை யுடனும் வளர்க்கப்பட்டவள். ஆனால் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதுதானே தற்கால சமூக நியதியும் அவளது வாழ்க்கையும் மாறிவிடுகிறது. தனக்கு வாழைமரத்தையும் தென்னைமரத்தையும் உவமையாகக் கூறுகிறாள்.


வடக்கே நெலாக் காய-ஒரு
வாழ மரம் பூச் சொரிய
வாழ கருக் கழிஞ்சே(ன்)-நான்
வா மயிலா சீரழிஞ்சேன்
தெற்கே நிலாக்காய-ஒரு
தென்னமரம் பூச்சொரிய
தென்ன கருக்கழிஞ்சேன்-நான்
தே மயிலா சீரழிஞ்சேன்

உதவியவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

தருமபுரி மாவட்டம்.

மனுவை இழந்தவள்

(கணவனை இழந்தவளின் ஒப்பாாி பாடல்)

மண்ணெக் கொளப்பி-ஒரு
மணக் கரும்பு நாத்துமிட்டு
மனு வெல்லாம் அந்தப் புரம்
மணிக்கரும்பு இந்தப் புரம்