பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

570

தமிழா் நாட்டுப் பாடல்கள்




சேத்தை கலக்கி-ஒரு
செங்கரும்பை நாத்து மிட்டு
சேனை யெல்லாம் அந்தப் புரம்
செங்கரும்பு இந்தப் புரம்.

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

சேலம் மாவட்டம்.

தேவேந்திரன் தங்கை

அவளுக்குத் தேன் மேல் ஆசை உண்டாகிறது. உடனே தன் அண்ணனுக்குச் செய்தி அனுப்புகிறாள். அண்ணன் தங்கையிடம் மிகவும் அருமையாக நடந்து கொள்பவன் உடனே அவள் கேட்டதை அனுப்பி வைக்கிறான். அதுபோல அவள் கேட்கும் ஒவ்வொரு பொருளையும் உடனே அனுப்பி வைக்கிறான். அத்தகைய சாமான்களைப் பற்றிப் பிறர் அவளிடம் விசாரிக்கும் பொழுது தன் அண்ணன் அனுப்பியது என்று பெருமையோடு சொல்லிக் கொள்வதோடல்லாமல் அண்ணனையும் தேவேந்திரன், கர்ணன் என்று வருணித்துச் சிறப்பிக்கிறாள். அந்த அண்ணனை அவள் பிரிந்து விட்டாள். 'நான் கேட்டவற்றை உடனே அனுப்பிய அண்ணன் பிரிந்து விட்டாரே! இனி நம்மை யார் கவனிப்பார்கள்? யார்தான் கேட்டவற்றை அன்போடு அனுப்பி வைப்பார்கள்?' என்றெண்ணி துக்கம் மேலிட புலம்புகிறாள்.

தேனு மேல ஆசை வச்சி
சீட்டெழுதி நான் போட்டா
சீட் டெ படிச்சி பாத்து
தே னெ வெட்டி கீளெறக்கி
திருப்பதிக்குப் பாரஞ் செஞ்சி
தெருவிலே அனுப்பி வைச்சா
தெருவிலே கண்ட ஜனம்
தேனு வண்டி யாரு திண்ணா
தேவேந்திரன் தங்கைக்கிண்ணார்.
காய் மேல ஆசை வச்சி
கடுதாசி எழுதிப் போட்டா
கடுதாசி படிச்சி பாத்து
காயா வெட்டி கீளெறக்கி
கப்பலில் பாரஞ் செஞ்சி
கடலிலே ஒட்டிவிட்டா
கப்பலிலே இருக்கு(ம்) ஜனம்