பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாாி

571




காயிபாரம் யாரு திண்ணா-இந்த
கர்ண னொட தங்கைக் கிண்ணர்

வட்டார வழக்கு: காயிபாரம்-காய் (வண்டி)


குறிப்பு: கர்ணன், தேவேந்திரன் கொடைவள்ளல்களாவார். ஆதலால் அத்தகை கொடை வள்ளல்களோடு தன் அண்ணனை யும் ஒப்பிடுகிறாள்.

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

தருமபுரி மாவட்டம்.

வேடுவர்க்குத் தங்கை

அவள் பிறந்த வீடு செல்லவேயில்லை. அவளைத் திருமணம் செய்து கொடுத்த அவளது பெற்றோர் மணம் செய்து கொடுத்த பின்னர் அவளைக் கூப்பிடவேயில்லை. பெற்றோர்களின் காலத்திற்குப்பின் உடன் பிறந்தானாவது அழைப்பான் என்று நினைத்தால் அவனும் பேசாமலிருந்து விட்டான். இந்நிலையில் வேளாளப் பெண்ணாகிய அவள் விதவையாகி விட்டாள். விதவையான பின்பு வெள்ளையுடுத்தி பிறந்த ஊருக்கு வருகிறாள். வீதியிலே அவளை இனத்தார் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவள் ஊருக்கு வந்து போய் இருக்கவில்லையல்லவா? ஒருத்தி அவளைப் பார்த்து "காராளச்சியாகிய நீ யார்?" என்று. அறிந்துகொள்ளும் ஆவலோடு கேட்கிறாள். இதைக் கேட்ட அவள் தான் இந்நிலையில் ஊருக்கு வந்திருக்கிறோமே தன் சகோதரன் தன்னைப் பிறர் இனம் கண்டு கொள்ள முடியாத நிலையில் வைத்து விட்டானே! என்ற எரிச்சலில் "நான் யாருக்கும் உறவினளல்ல. காட்டில் வாழும் வேடுவர்களின் தங்கை" என வருந்திக் கூறுகிறாள்.

கருப்பருகு சேலை கட்டி-நாம் பொறந்த
காஞ்சிக்குப் போனாலே
காஞ்சி பொரம் பெண்களெல்லாம்-அங்கவரும்
காராளச்சி யாருயிண்ணர்
காராளச்சியில்லையம்மா-நான்
கர்ணனொட தங்கையிண்ண
வெள்ளருகு சேலைக்கட்டி-நான் பொறந்த
வீராணம் போனாலே