பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாாி

573




சிந்திட்ட கண்ணீரை
செண்ணுட்டேன் மாளிகைக்கு

வட்டார வழக்கு: அண்ணனாண்ட-அண்ணனிடம்; சிந்திட்ட-சிந்தி விட்டேன்; செண்ணுட்டேன்-சென்று விட்டேன்.

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

தருமபுரி மாவட்டம்.

தங்கியிருந்தாலாகாதோ?

அவளைப் பல நூறு மைல்களுக்கப்பால் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கிறது. தாய் உடல் நலமில்லாத செய்தியை அறிந்து உடனே ஒடோடி வருகிறாள் பார்ப்பதற்கு. அவள் வரும் வரை தாயின் உடலில் உயிர் தங்கியிருக்கவில்லை. அம்மாவை உயிரோடு பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வந்த அவளுக்குத் தன் தாயை உயிரோடு பார்க்க முடியாததால் 'உன்னுடைய அருமை மகளாகிய, என்னைப் பார்க்க ஆசையில் லையா? நான் வரும் வரை பொறுத்திருக்க முடியவில்லையா? ஏன் என்னை விட்டுப் பிரிந்து விட்டாய்? எனத் தாயின் அருகிலுட்கார்ந்து கதறுகிறாள்.

பொன்னுக் கம்பி வில் வளச்சி
பொழுது மேலே கப்பலோட்டி-நீ பெத்த
பொண்ணாளும் வாராளிண்ணும்
பொறுத்திருந்தாலாகாதா?
தங்கக் கம்பி வில் வளச்சி
தண்ணி மேலே கப்பலோட்டி-நீ பெத்த
தங்காளும் வாராளிண்ணும்
தங்கியிருந் தாலாகாதா?

வட்டார வழக்கு: வாராளிண்ணும்-வருகிறாள் என்றும்.

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

தருமபுரி மாவட்டம்.


A 519 - 37