பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

574

தமிழர் நாட்டுப் பாடல்கள்




பூசை முடிஞ்சு போச்சோ

கணவன் இறந்து விட்டான். மனைவி அவனுடைய பழக்க வழக்கங்களைச் சொல்லி அழுகிறாள். அவன் காலையில் குளித்து மிக ஆசாரமாக பலகையில் அமர்ந்து பூசை செய்வான். விரதங்கள் அனுஷ்டிப்பான்.

அவற்றை நினைத்துப் பொருமியவளாய்த் துக்கம் தாளாமல் 'பூசை முடிந்துவிட்டதென்று பொன்னு ரதம் ஏறி விட்டீர்களோ? தவசு முடிந்து விட்டதென்று தங்க ரதம் ஏறி விட்டீர்களோ? என்று கூறிப் புலம்புகிறாள்.

பொன்னு விசுப்பலகை
பூசப் பொன்னா ஆசாரம்-உங்களோட
பூசை முடிஞ்சு போச்சோ
பொன்னு ரதம் ஏறினிங்க
தங்க விசுப்பலகை
தவசு பண்ணும் ஆசாரம்-உங்களோட
தவசு முடிஞ்சிடுச்சோ?
தங்க ரதம் ஏறினீங்க

குறிப்பு: பொன் ரதம், தங்க ரதம்---இறந்து போனவர்கள் அதில் ஏறிச் செல்வதாகக் கற்பனை.

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

சேலம் மாவட்டம்.

அண்ணி கொடுமை

பிறந்த வீட்டில் செல்லப் பெண் அவள். ஆனால் புருஷன் வீடு போக வேண்டியவள்தானே எந்த செல்லப் பெண்ணும். பின்பு அண்ணன் மனைவிதானே வீட்டுக்கு உரிமையுடையவள். அதோடு அண்ணியாக வருபவள் குணங்கெட்ட கொடுமைக்காரியாகவும் இருந்துவிட்டால் பின் பிறந்தகத்தைப் பற்றிய ஆசை நினைவுகளைக்கூட விட்டுவிட வேண்டியதுதானே அவளது தந்தை இருந்த மட்டும் அபூர்வமாகப் போய் வருவாள். தந்தை இறந்த பின்பு எப்படிப் போக முடியும் அண்ணி ஆட்சி செலுத்தும் தன் பிறந்த வீட்டுக்கு? இதைக் கூறி அழுகிறாள் அவள்.

மூணுதலை வாசல்
முப்பத் தெட்டு ஆசாரம்