பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாாி

575




ஆசாரத்து உள்ளாக
அல்லி பொறந்திருக்க
அடிக்கத் துணிஞ்சாங்க
ஆள் போட்டுத் தள்ளுனாங்க
நாலு தலெ வாசல்
நாப்பத் தெட்டு ஆசாரம்
ஆசரத்து உள்ளாக
அல்லி பொறந்திருக்க
குத்தத் துணிஞ்சாங்க
கோல் போட்டுத் தள்ளுனாங்க

வட்டார வழக்கு:பொறந்திருக்க-பிறந்திருக்க,

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

தருமபுரி மாவட்டம்.

காய்க்காத மரம்

அவள் தன் பிறந்த வீட்டுக்குப் போகாமலேயே இருந்து விட்டாள். சந்தர்ப்பங்களும், சூழ்நிலையும் அப்படி ஒரு போக முடியாத நிலைமையை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அவள் திடீரென்று பிறந்த வீட்டிற்குப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. காரணம் அவள் தந்தை உயிர் நீத்ததாக வந்த செய்தியே.

'நான் சலித்து ஒருநாள்கூட, என் பிறந்த வீட்டில் போய் நிம்மதியாக இருந்து வரவில்லையே. அப்படி நான் பிறந்தவீடு வந்ததும் உங்கள் சாவுக்குத்தானா? என்று இறந்த தன் தந்தையை எண்ணி ஒப்பாரி பாடுகிறாள்:

ஏலக்காய் காய்க்கும் மரம்
எளச்சி வந்தா தங்கும் மரம்
ஏலக்காய் காய்க்கலியே
எளச்சி வந்தும் தங்கலியே
ஜாதிக்காய் காய்க்கும் மரம்
சலிச்சு வந்தா தங்கும் மரம்
ஜாதிக்காய், காய்க்கலியே
சலிச்சி வந்தும் தங்கலியே