பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

576

தமிழர் நாட்டுப் பாடல்கள்


 வட்டார வழக்கு எளச்சி-இளைத்து: சலிச்சி - சலித்து,

உதவியவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

தருமபுரி மாவட்டம்.

கொண்டவனைக் கூட தோத்தேன்

அவள் வெளியூர் சென்று வர மிகவும் ஆசைப்படுகிறாள். மனைவியின் ஆசையை நிறைவேற்ற கணவன் அவளை, மாயவரம், கும்பகோணம் முதலிய இடங்களுக்கு அழைத்துச் சென்றான். ஆனால் சென்ற இடத்தில் பயங்கரக் காலராவினால் தனது தாலியை இழப்போம் என்று அவள் கனவிலும் எண்ணவில்லை. தான் ஆசையுடன் வந்த இந்தப் பிரயாணம் இன்பப் பிரயாணமாக இல்லாது பெருந் துன்பத்தைக் கொடுக்கக்கூடியதாக அமைந்ததை எண்ணி அழுகிறாள்.

மாயவரம் சங்கு நதி
மயிலாட்டம் பார்க்கப் போனேன்
மாறா பதக்கம் தோத்தேன்
மன்னவனே கூட தோத்தேன்
கும்பகோணம் சங்கு நதி
குயிலாட்டம் பார்க்கப் போனேன்
கொத்து சரம் தோத்தேன்
கொண்டவனைக் கூட தோத்தேன்

வட்டார வழக்கு: கொத்து சரம், மாறா பதக்கம் -தாலி.

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

சேலம் மாவட்டம்.

அண்ட முடியலியே

தனக்குப் பின்னால் தன் மகள் இங்கு வந்தால் வரவேற்பிராது என்றும், அவமதிக்கப்படுவாள் என்றும் தந்தைக்குத் தெரியும். அதனால் தான் உயிரோடிருக்கும் போதும் தான் வீட்டிலிருக்கும் சமயம் வரச் சொல்லுவார் தன் மகளை. மகள் வருகிறாள் தந்தையின் சாவுக்கு. தான் உயிரோடிருக்கும் போது தன்னைப் பிறந்த வீட்டில் வரவேற்று அன்புடன் ஆதரித்து "நான் இல்லாத சமயம் வராதே" என்று முன் கூட்டியே அறிவித்தாரே அவர் நிரந்தரமாகப் பிரிந்து போய்விட்டாரே