பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 தமிழர் நாட்டுப் பாட ல்கள் வட்டார வழக்கு: ஒளவு-உழவு: காஞ்சு-காய்ந்து; முத்து செடி-அழகான செடி, ஆரியம்-நாடு. சேகரித்தவர். இடம்: s S. சடையப்பன் கொங்கவேம்பு, அரூர்வட்டம் தருமபுரி மாவட்டம்.

   பஞ்சமும் மழையும் 
  பஞ்சத்தில் ஆடு, மாடு, நகை, நட்டு எல்லாம் விற்றாகி விட்டது. காடு தேடிப் போய் கிடைக்கிற இலை தழைகளை அவித்துத் தின்னும் நிலைமை வந்து விட்டது. கம்பு விதைத்து மண்ணோடு மண்ணாகிக் கிடக்கிறது. மழையின் ரேகை சிறிதும் காணோம். மக்கள் உள்ளம் வெதும்பி வருணதேவனிடம் முறையிட்டுக் கொள்கிறார்கள்.
 வருண தேவன் கருணையால், மழை பொழியத் தொடங்கு கிறது. மின்னல் மின்ன இடி இடித்து மழை பெய்யும் போது பூமி குளிர்கிறது. மழையில் நனைந்து கொண்டே உழவர்கள் மழையை வரவேற்கிறார்கள்.
  ஆடு வித்து, மாடு வித்து 
  ஐயோ வருண தேவா! 
  அத்தனையும்் கூட வித்து 
  ஐயோ வருண தேவா! 
  காது கடுக்குவித்து 
  ஐயோ வருண தேவா 
  கை வளையல் கூடவித்து 
  ஐயோ வருண தேவா! 
  இச் சிக்காய் தின்ன பஞ்சம் 
  ஐயோ வருண தேவா! 
  இன்னும் தெளியலையே 
  ஐயோ வருண தேவா! 
  காரைக்காய்த்் தின்ன மக்கள் 
  ஐயோவருணதேவாா! 
  காதடைச்சு செத்த மக்கள் 
  ஐயோ வருண தேவா! 
  மக்க வெதச்ச கம்பு
  மச்சு வந்து சேரணுமே!