பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மழையும் பஞ்சமும் 69

  ஓடி வெதச்ச கம்பு 
  ஊடுவந்து சேரணுமே 
  கலப்பை பிடிக்குந் தம்பி 
  கை சோந்து நிக்கிறாங்க! 
  அதுக்கே மனமிரங்கு 
  ஐயோ வருண தேவா! 
  ஏர் பிடிக்குந் தம்பி யெல்லாம் 
  எண்ணப்பட்டு நிக்கிறாங்க 
  அதுக்கே இறங்க வேணும் 
  ஐயோ வருண தேவா! 
  பேயுதையா பேயுது 
  பேய் மழையும் பேயுது 
  ஊசி போல காலிறங்கி 
  உலகமெங்கும்் பேயுது 
  உலக மெங்கும் பேஞ்ச மழை 
  ஊரிலெங்கும்் பேயலே 
  பாசி போல காலிறங்கி 
  பட்டணமே பேயுது 
  பட்டணமே பேஞ்ச மழை, 
  பட்டியிலே பேயிலே 
  துட்டு போல மின்னி 
  சீமையெங்கும் பேயுது 
  சீமை யெங்கும் பேஞ்ச மழை 
  செல்ல மழை பேயுது.

வட்டார வழக்கு: வித்து-விற்று, கடுக்கு-கடுக்கன், ஊடு-வீடு. உதவியவர்: இடம்: பாவாயி செருக்கலைப்பாளையம், சேகரித்தவர். புதுப்பாளையம். கு. சின்னப்ப பாரதி

        பஞ்சம் 
    தேளாச் சுருண்டழுதோம்
   ஊரையடுத்த புளியமரத்தடியில் இளைஞர்கள், பந்தாடி, மகிழ்ச்சியாக நேரம் போக்குவார்கள். பஞ்சத்தால் உடல் நலிந்த