பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 தமிழர் நாட்டுப் பாடல்கள் இளைஞர்கள் எழுந்து நடக்கவும் சக்தியின்றி மெலிந்திருக்கிறார் கள். அவர்கள் உள்ளத்தில் மகிழ்ச்சியில்லை. அவர்களது வேதனையை "பாம்பாச் சுருண்டழுதோம், தேளச் சுருண்டழு தோம்" என இரண்டு உவமைகளின் மூலம் விளக்குகிறார்கள்.

  பரட்ட புளிய மரம் 
  பந்தாடும் வில்ல மரம்   
  பந்தாடும் நேர மெல்லாம் 
  பகவானை பார்த் தெழுதோம். 
  பாம்புக்கோ ரெண்டு கண்ணு 
  பகவான் கொடுத்த கண்ணு 
  பாவிப் பய சீமையிலே 
  பாம்பா சுருண்ட ழுதோம். 
  தேளுக்கோ ரெண்டு கண்ணு 
  தெய்வம் கொடுத்த கண்ணு 
  பாவிப்பய தேசத்திலே 
  தேளாசுருண் டமுதோம்.

சேகரித்தவர்: இடம்: எம். பி. எம். ராஜவேலு

        மீளவிட்டான்், தூத்துக்குடி,
         திருநெல்வேலி மாவட்டம்.
      மானம் விடிவதெப்போ?
  பருவ மழையின்றி வானம் பொய்த்து விட்டால் ஏற்படும் உண்மையான தாக்குதலுக்கு எல்லோரையும் விட முதலில் பலியாகிறவன், மண்ணை நம்பி நிற்கும் விவசாயிதான். மழை யைக் கண்டால் அவனுக்கு தெய்வத்தைக் கண்டது போல். பசித்த வயிற்றில் பால் வார்த்தது போல்.
   மழை பொய்த்து விட்டால் வருண தேவனுக்குப் பொங்கல் வைப்பார்கள். கோழி பலி கொடுப்பார்கள். நிலவுபொழியும் இரவில் கன்னிப் பெண்கள் உப்பில்லாத கூழ் குடித்து பிள்ளையார் சிலையைப் பிடுங்கி கரைத்த சாணியை அதன் மேலே ஊற்றி வைப்பார்கள். மழைக் கடவுளை வேண்ட வருண பகவான் மழை பெய்து பிள்ளையாரைச் சுத்தப்படுத்துவதாக ஐதிகம். மழை பெய்த பின் பிள்ளையாரைப் பிரதிஷ்டை செய்து பூஜிப்பார்கள்.
  அப்படி மழையில்லாத காலத்தில் கன்னிப் பெண்கள் வருணனை வேண்டிப் பாடும் பாக்கள் இவை.