பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மழையும் பஞ்சமும் 71

  பூமியை நம்பி 
  புத்திரரைத் தேடி வந்தோம், 
  பூமி பலியெடுக்க 
  புத்திரர் பரதேசம்
  மானத்தை நம்பி 
  மக்களைத் தேடி வந்தோம் 
  மானம் பலியெடுக்க 
  மக்களெல்லாம் பரதேசம் 
  ஏர் பிடிக்கும் தம்பியெல்லாம் 
  பின்னப் பட்டுநிக்கிறாங்க 
  அந்தக் குறை கேட்டு 
  வந்திறங்கு வர்ணதேவா 
  மேழி பிடிக்கும் தம்பியெல்லாம் 
  முகஞ்  சோந்து நிக்கிறாங்க 
  அந்தக் குறை கேட்டு 
  வந்திறங்கு வர்ண தேவா, 
  காட்டுத் தழை பறித்து 
  கையெல்லாம் கொப்புளங்கள் 
  கடி மழை பெய்யவில்லை 
  கொப்புளங்கள் ஆறவில்லை. 
  வேலித் தழைபறித்து 
  விரலெல்லாம் கொப்புளங்கள் 
  விரைந்து மழை பெய்யவில்லை 
  வருத்தங்கள் தீரவில்லை, 
  மானம் விடிவதெப்போ, எங்க 
  மாட்டுப் பஞ்சம் தீர்வதெப்போ? 
  பூமி செழிப்ப தெப்போ, எங்க 
  புள்ளைப் பஞ்சம் தீர்வதெப்போ? 
  ஓடி வெதச்ச கம்பு ஐ
  ஐயோ வருண தேவா 
  ஊடுவந்து சேரலையே 
  பாடி வெதச்ச கம்பு 
  ஐயோ வருண தேவா 
  பானைவந்து சேரலையே.

உதவியவர் : இடம்: முத்துசாமி வாழநாயக்கன்

               பாளையம், சேகரித்தவர்:     சேலம் மாவடட்ம்.

கு. சின்னப்ப பாரதி