பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72


தமிழர் நாட்டுப் பாடல்கள்

   மழையே வா

ஊசி போல் மின்னல் மின்ன,

ஊரிக் கிணறு தண்ணிவர, 

பாசி போல மின்னல் மின்ன, பாங்கிணறு தண்ணிவர, சட்டியிலே மாகரைத்து

சந்தை யெல்லாம் கோலமிட்டு, கோலம் அழிய வில்லை; 

கொள்ளை மழை பெய்ய வில்லை; கிண்ணியிலே மாகரைத்து கங்கை யெல்லாம் கோலமிட்டு, கோலம் அழியவில்லை; கொள்ளை மழை பெய்ய வில்லை; மேழி பிடிக்கும் தம்பி முகம் சோர்ந்து போகு தம்மா! கலப்பை பிடிக்கும் தம்பி கை சோர்ந்து நிக்கு தம்மா

 உதவியவர்:         இடம்:                      

ம.கிருஷ்ணன் முத்துகாபட்டி, சேகரித்தார்: நாமக்கல் வட்டம், கு.சின்னப்ப பாரதி சேலம் மாவட்டம்.

        பஞ்சம்
  ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அடிக்கடி பஞ்சங்கள் தோன்றின. பசியால் பதறிய மக்கள் முகம் கண்டு தாய்மார் பதறினர். மக்களைக் கொல்ல வரும் பஞ்சத்தில், தங்களைப் படைத்த கடவுளை நோக்கி மழை வரம் வேண்டுகிறார்கள்.
  வானத்தை நம்பியல்லோ
  மக்களைத் தேடி வந்தோம் 
  மானம் பலியெடுக்க மக்கள் 
  பரதேசம்
  மன்னரெல்லாம் தன் நாசம், 
  பூமியைத் தேடியல்லோ 
  புத்திரரைத் தேடி வந்தோம்,