பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மழையும் பஞ்சமும் 73

பூமி பலியெடுக்க புத்திரர் பரதேசம் 
புண்ணியரும்் தன்னாசம் 
சோறு சோறு என்று சொல்லி 
துள்ளுது பாலரெல்லாம் 
அன்னம் அன்னம் என்று சொல்லி 
அழுகுது பாலரெல்லாம்   
கோடை அழிய வேணும், 
கொள்ளை மழை பெய்ய வேணும், 
மாவு கொதிக்க வேணும்,
குழந்தை பசியாற வேணும், 
பூமி விளைய வேணும் 
புள்ளை பசியாற வேணும்.

உதவியவர்:. இடம்: ஜானகி முத்துகாபட்டி, சேகரித்தவர்: நாமக்கல் வட்டம், கு.சின்னப்ப பாரதி சேலம் மாவட்டம்.

         ஆற்று நீர்
    தண்ணிக்குத் தீட்டில்லை
  மேல் ஜாதிக்காரர்களுக்குக் குடி தண்ணீர் எடுக்க ஒரு கிணறும், கீழ் ஜாதிக்காரர்களுக்குத் தண்ணிர் எடுக்க ஒரு கிணறுமாக ஒதுக்கி வைத்திருப்பதை நாம் இன்றும்- ஒரு காந்திஜியும், வினோபாஜியும் தங்கள் வாழ்நாளை தீண்டாமை ஒழிப்புக்காகச் செலவு செய்த பின்னரும் அப்படியே இருப்ப தைக் காண்கிறோம். மனிதன் செயற்கையாகச் செய்து கொண்ட கிணற்றில்தான் இந்தத் தீண்டாமை இருக்கிறது. அதேபொழுது இயற்கை படைத்த ஆறுகளில் எவ்விதத் தடையுமின்றி எல்லோரும் நீர் எடுப்பதையும் பார்க்கிறோம்.
  தண்ணிருக்குத் தீட்டில்லை. பார்ப்பனர் முதல் பறையர் வரை, தோட்டி முதல் தொண்டைமான் வரை தெய்வமாகத் தொழுவதும் பச்சைத் தண்ணிரையே. ஆனால், அந்தப் பச்சைத் தண்ணீரே சில சமயங்களில் தீராத பகையை மூட்டுவதற்குக் காரணமாகி விடுகிறது-எப்பொழுது? அது கிணற்றில் கிடக்கும்