பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மழையும் பஞ்சமும் 77 சொகுசான மகராச மக்களுகளெல்லாம் மழுங்கலாய் துட்டுக்கு புண்ணாக்கு வாங்கியே மறைவுக்குப் போவாராம் உண்பதற்கே புழுங்கலரிசிச் சாதம் சேராதுன்னு சொன்ன புண்ணிய மகராச மக்களுகளெல்லாம் மலைக் கத்தாழைக் குருத்தினைப் பிடுங்கியே மண்திட்டு மறைவிலே மடுக்கிண்ணு கடிப்பாராம் எப்பத்தான் நமக்கு காலம் செழிக்குமோ உப்போ பணத்துக்கு இரண்டு படிவிலை ஊருக்கிணத்திலே தண்ணியில்லை நமக்கு எப்பவேகாலம் செழிக்குமென்றால்-துரைக்கு அப்பவே விண்ணப்பம் போடலா மென்றார். வட்டார வழக்கு: கவுண்டர்-பயிரிடும் சாதியார்; கொதவு -ஒத்தி, அடைமானம். குறிப்பு: கடிப்பாராம்-நல்ல உணவைக் குறை கூறியவர் கள், புண்ணாக்கும் கற்றாழையும் தின்பார்கள். உதவியவர்: இடம்: சின்னப்ப கவுண்டர் மாடகாசம்பட்டி, சேகரித்தவர்: சேலம் மாவட்டம். கு. சின்னப்ப பாரதி

      பஞ்ச காலம்
  அவருக்கு அருமையான தலைச்சன் குழந்தை பிறந்திருக்கி றது. வயலில் விதைத்த விதை முளைத்துப் பயன்தராதே என்று குழந்தையின் தந்தையும், பாட்டனும் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருக்கிறார்கள். ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் ஏற்படும் மகிழ்ச்சி அந்த வீட்டில் இல்லை. பெற்றவன்கூடக் குழந்தையை மதிக்கவில்லையே என்று தாய் கவலைப்படுகி றாள், மணப்புறா போலவும், நீலப்புறா போலவும் உள்ள குழந்தையை அள்ளி எடுத்து அணைப்பதற்கு, உறவினர் முன் வராத நிலையைப் பஞ்சம் சிருஷ்டித்து விட்டதே என்று அவள் கவலைப் படுகிறாள்.

(குறிப்புரை:சின்னப்ப பாரதி)

  மானம் கவுந்து வரும்
  மாடமணப்புறா மேஞ்சு வரும்

A 519 – 6