பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78 தமிழர் நாட்டுப் பாடல்கள் மணிப் புறா குஞ் சென்று மதிப்பாரே பஞ்சமையா! நீலம் கவுந்து வரும் நீலப் புறா மேஞ்சு வரும் நீலப் புறா குஞ்சென்று நெனைப் பாரே பஞ்சமையா! வட்டார வழக்கு: கவுந்து-கவிழ்ந்து-(மேகம் தாழ்ந்து வருவதைக் குறிக்கும்); மேஞ்சு-மேய்ந்து; நெனைப்பாரே - நினைப்பாரே. உதவியவர்: இடம்: சி. செல்லம்மாள் நாமக்கல் வட்டம், சேகரித்தவர். சேலம் மாவட்டம். கு. சின்னப்ப பாரதி