பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாலாட்டு 97 வண்டாடிப் பூமலர, வையகத்தார் கொண்டாட-என் கண்ணே உன்னைக் கொண்டாடிப் பூ முடியும் உன் கோலத்திருமுடிக்கு ஏலக்காய் காய்க்கும்; இலை நாலு பிஞ்சுவிடும் சாதிக்காய் காய்த்து இறங்கும்-உன் தாய் மாமன் வாசலிலே பச்சை நிறம் வள்ளி, பவள நிறம் தெய்வானை சோதிநிறம் சுப்பையா சொன்ன வரம் தந்தாரோ! உசந்த தலைப்பாவோ, உல்லாச வல்லவட்டு நிறைந்த தலைவாசலிலே நீ நிற்பாய் மருமகனே! வட்டார வழக்கு: மானல்ல-மானல்லவா, போராக_போகிறார்கள்; தலைப்பா-தலைப்பாகை. சேகரித்தவர்:

                     இடம்: 

குமாரி பி.சொரணம்

                     சிவகிரி,
           நெல்லை மாவட்டம்.

பெண் தாலாட்டு பெண் குழந்தை நடை பயிலுகிறது; தாய் அதன் தளர் நடையைக் கண்டு மகிழ்கிறாள். அவள் மனத்தில் சில சித்திரங்கள் தோன்றுகின்றன. தன்மகள் பக்கத்து வீதிகளுக்குச் செல்லும்பொழுது அவள் வயதுப்பெண் குழந்தைகள் அவ ளோடு சேர்ந்து விளையாட ஆசைப்பட்டு அவளுடைய பந்தையும், செண்டையும் மறைப்பதை மனக் கண்முன் காண்கிறாள். குழந்தைக்கு இரண்டு அத்தைமார்கள் உண்டு; அவர்களுடைய தெரு வழியே செல்லும்பொழுது அவளைக் கண்டு அத்தை மக்கள், அவளது அழகில் ஈடுபட்டு அவள் வாயை முத்தமிடுகிறார்களாம். அத்தை மகன் பெண்ணுக்கு மாப்பிள்ளை முறையாவான். பல கணவர் முறை நிலவியிருந்த காலத்தில் கூட்டு மண முறைக்கு அத்தைமகன், மாமன் மகன் இவர்கள் மாப்பிள்ளை முறையாக இருந்தார்கள். சொத்துரிமை