பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 தமிழர் நாட்டுப் பாடல்கள் தந்தை வழியாக இறங்கத் தொடங்கிய பின்பு கூட்டு மணமுறை படிப்படியாக மறைந்துவிட்டது. அப்பழைய வழக்கத்தின் எச்சமாகவே முறைமாப்பிள்ளை முறைப்பெண் என்ற வழக்கம் இன்னும் நிலைத்து நிற்கிறது. பாப்பார வீதிக்கு-எங்க பொண்ணு பந்தாடப் போனாலும். பாப்பாரப் பொண்ணுகண்டா பந்தெடுத்து மறைச்சிடுவா செட்டித் தெரு வீதிக்கு செண்டாடப் போனாலும் செட்டிச்சி பொண்ணு கண்டா செண் டெடுத்து மறைச்சிடுவா, கடலையே திண்ணுக் கிட்டு கட வீதி போனாலும் கட கெட்ட அத்தை மவன் கட வாயே முத்த மிட்டான் வெல்லத்தே திண்ணுக்கிட்டு வீதியிலே போனாலும் வெக்கங் கெட்ட அத்த மவன் வெறு வாயே முத்தமிட்டான். வட்டார வழக்கு: திண்ணுக்கிட்டு-தின்று கொண்டு சேகரித்தவர். இடம்: முத்துசாமி நாமக்கல் வட்டம்,

              சேலம் மாவட்டம்.

சீட்டெழுதி விட்டாளாம் சின்னாத் தங்கரையோரம்-எஞ்சின்னையா நீ சிறு மணலுக் கொழிக் கையிலே-உன் சின்ன அத்தைக் கண்டாளாம்-உனக்குச் சீட்டெழுதி விட்டாளாம்! பெரி யாத்தங் கரையோரம்-எஞ் சுப்பையா நீ பெரு மணலுக் கொழிக் கையிலே-உன் பெரிய அத்தைக் கண்டாளாம்-உனக்குப் பேரெழுதி விட்டாளாம்! பனை பிடிங்கிப் பல் விளக்கி-நீ பயிர் போல நாமமிட்டால்