பக்கம்:தமிழர் மதம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இடை நிலை யியல் ஒரு தனி மெய்ப் பொருளாகக் கொள்ளப் படுவதால், அதினின் றும் வேறாக வினை (கன்மம்) என்று மாசு கொள்ள வேண்டுவ தில்லை . இல்லறத்தாலும் வீடு பேறுண் டென்பது தமிழர் கொள்கை யாதலால், " இருள்சேர் இருவினை) என்று திருவள்ளுவர் கூறியது, தெரிந்தும் தெரியாதும் செய்யும் இரு வகைத் தீவினை களையே. (கச) மந்திரம் ஓங்காரம் (பிரணவம்) ஓம் என்னும் மூல மத்திரம், இறைவனை அம்மை யப்பனாக வுணர்த்தும் ஒலி வடிவாகும். அது ஓ என்னும் ஒரே யெழுத்தே. இன்னிசை பற்றி மகர இறு சேர்க்கப் பட்டது. ஓங்காரம் எனி னும் ஓகார மெனினும் பொருளளவில் ஒன்றே. வடமொழியில் அகர வுகரம் புணர்ந்து (ச உத்துங்கன் - குலோத்துங்கன் என்பது போல்) ஓகார மாபது நோக்கியும், எழுத்துப் போன மகரத்தைச் சொல் லுறுப்பாகக் கொண்டும், ஓம் என்பதை அ+உ+ம் எனப் பிரித்து, அம் மூவெழுத்தும் முறையே முத் திரு மேனியரையுங் குறிக்கு மென்றும், சிவனையும் சிவையையும் மாயையையுங் குறிக்கு மென்றும், ஆதனையும் (ஜீவாத்து மாவையும்) பரவாதனையும் (பரமாத்து மாவையும்) மாயையையுங் குறிக்கு மென்றும், பலவாறு கூறுவர். ஓங்காரம் ஒரே யெழுத் தென்பதை, ' ( ஓரெழுத் தாலே யுலகெங்குந் தானாகி” (திருமந். ப. இ. உரை, எண்டு) "ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்” (ஷை கசக) என்பவற்றாலும், ஓங்காரம் அம்மை யப்பனை யுணர்த்தும் எழுத் தென்பதை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/107&oldid=1429686" இலிருந்து மீள்விக்கப்பட்டது