பக்கம்:தமிழர் மதம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழர் மதம் 'ஓமெனும் ஓங்காரத் துள்ளே யொருமொழி ஓமெனும் ஓங்காரத் துள்ளே யுருவரு ஓமெனும் ஓங்காரத் துள்ளே பலபேதம் ஓமெனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே." (ஷ உசுஉஎ) "ஓங்காரத் துள்ளே யுதித்தவைம் பூதங்கள் ஓங்காரத் துள்ளே யுதித்த சராசரம் ஓங்காரா தீதத் துயிர்மூன்றும் உற்றன ஓங்கார சீவ பரசிவ ரூபமே.' (ஷை உசுஉ அ) என்ப வற்றாலும், அறியலாம். ஓங்கார வரி வடிவம் தமிழ் ஓகார வரி வடிவே யாத லாலும், அது யானை வடிவை பொத்த தென்று விநாயக புரா ணங் கூறுவதாலும், ஓங்கார மந்திரம் தமிழ் மந்திரமே யென் பது தெளிவாம். அது சிவனியத்திற் குரிய தாயினும், மானியத்திலும் ஆளப் படுவது, முன் ன தன் முன்மையையும் தொன்மையையும் முதன்மையையும் உணர்த்தும். திருவைந் தெழுத்து சிவ போற்றி' (- சிவனே! வணக்கம்) என்பதே, தமி ழர் கொண்டதும் உண்மை யானதுமான திருவைந் தெழுத் தாம். மாணிக்க வாசகரின் போற்றித் திரு வகவலி லுள்ள போற்றித் தொடர்களை நோக்குக. (தென்னாடுடைய சிவனே போற்றி (போற்றி. கசுச). ஆரியர், சிவ போற்றி' என்னும் உண்மைத் திருவைந் தெழுத்தைச் சமற்கிருதத்திற் சிவாய நம:' என்று மொழி பெயர்த் துள்ளனர். சிவாய என்பது வடமொழி யுரு பேற்ற தென் சொல். யே' என்பது வடமொழியில் ச-ஆம் வேற்றுமை ஒருமை யுருபு. அதை யேற்கும் பெயரின் அகர வீறு ஆகார வீருக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/108&oldid=1429687" இலிருந்து மீள்விக்கப்பட்டது